தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர்... திடீரென காலில் விழுந்து கலங்கிய பெண்கள்

செங்கல்பட்டில் வீடுகளை இடிக்கக் கூடாது எனக் கூறி பெண்கள் அமைச்சரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
x
செங்கல்பட்டில் வீடுகளை இடிக்கக் கூடாது எனக் கூறி பெண்கள் அமைச்சரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். அங்குள்ள, பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் நடைப்பெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். அப்போது, பொது மக்களுக்கு இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டபோது, நேதாஜி பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள், தங்களது பகுதியில் உள்ள குடியிருப்புகளை காலி செய்யச் சொல்லி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்