தோண்ட தோண்ட வந்த முதுமக்கள் தாழிகள்... கிராம மக்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏரியூர் உலகினிப்பட்டி கிராமத்தில் உள்ள பொட்டக்குண்டு கண்மாயில் முதுமக்கள் தாழி உள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்த நிலையில், சிங்கம்புணரி வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது. மேலும், 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு இருப்பதாகவும், எனவே தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்