மருத்துவ மாணவிக்கு தெரியாமல் வீடியோ எடுத்த நபர் - கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார்

சென்னையில் மருத்துவ மாணவியை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததாக ஸ்டான்லி மருத்துவமனை தடயவியல் அதிகாரி மீது கல்லூரி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
x
சென்னையில் மருத்துவ மாணவியை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததாக ஸ்டான்லி மருத்துவமனை தடயவியல் அதிகாரி மீது கல்லூரி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் மாணவி ஒருவர் தொடர்ந்து 10 நாட்களுக்கு கையெழுத்திடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதுகுறித்து கல்லூரியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. அதில், கல்லூரியில் தடயவியல் துறை அதிகாரியாக பணிபுரியும் லோகநாதன் என்பவர் மாணவியை வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக விளக்கமளிக்க கல்லூரி நிர்வாகம் தரப்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், மாணவியை தடயவியல் துறை அதிகாரி வீடியோ எடுக்கும் காட்சிகள் ஒளிபரப்பட்டன. அதன் பின்னர் பேசிய, மருத்துவமனை நிலைய அலுவலர் ரமேஷ், மாணவி மீது எந்த தவறும் இல்லையென்றும், இதுகுறித்து வீடியோ எடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்