சென்னை ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு - விஷ்வநாத் ஆனந்த்துக்கு முக்கிய பொறுப்பு

சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.44
x
சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டிக்காக 2 ஆடவர் மற்றும் 2 மகளிர் பிரிவுகளை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடவர் பிரிவு முதல் அணியில் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, ஹரி கிருஷ்ணா, அர்ஜுன், எஸ்.எல். நாராயணன், சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோரும் இரண்டாவது அணியில், நிஹல் சரின், குகேஷ், அதிபன், பிரக்ஞானந்தா, சத்வனி ரனாக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், மகளிர் பிரிவு முதல் அணியில் கொனேரு ஹம்பி, ஹரிகா, ஆர். வைஷாலி, தானியா சச்தேவ், குல்கர்ணி பக்தி ஆகியோரும் இரண்டாவது அணியில் வந்திகா அகர்வால், செளம்யா சுவாமிநாதன், கோம்ஸ் மேரி ஆன், பத்மினி, திவ்யா தேஷ்முக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக விஷ்வநாத் ஆனந்த் செயல்பட உள்ளார். மேலும், சென்னையில் நடைபெற உள்ள இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பிரக்ஞானந்தா, வைஷாலி, குகேஷ், சசிகிரண் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்