பால்வாடியில் குக்கர் வெடித்து மூன்று குழந்தைகளுக்கு காயம்

பால்வாடியில் குக்கர் வெடித்து மூன்று குழந்தைகளுக்கு காயம்
x
 திருப்பூர் அருகே பாலவாடியில் குக்கர் வெடித்து மூன்று குழந்தைகள் காயம் அடைந்தனர்.சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் ஆகியும் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்க வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


காங்கேயம் அடுத்த ஹாஸ்டல் பகுதியில் 10 க்கு 10 அளவு கொண்ட சிறிய அறையில், அங்கன்வாடி மையம் செயல் பட்டுவருகிறது.  இந்த பால்வாடியில் சுமார் 6 வயது வரை 20 குழந்தைகள் தினமும் படிக்க வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள் அன்று காலை, சத்துணவு மையத்தில் குக்கர் மூலம் பருப்பு மற்றும் முட்டை வேக வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குக்கர் வெடித்து சிதறி உள்ளது. இதில் அருகில் இருந்த மூன்று குழந்தைகளுக்கு மட்டும் கை, கால்,கண் என பல்வேறு இடங்களில் வெந்நீர் பட்டு காயம் ஏற்ப்பட்டுள்ளது. காயம் அடைந்த மாணவர்கள்,  தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை பெற்று  வந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் ஆகியும் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்க வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்