நேருக்கு நேர்... பஸ் மீது பைக் மோதல் - அதிர வைக்கும் காட்சிகள்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வெள்ளாளபாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி என்பவர், உடுமலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நல்லாம்பள்ளி பிரிவு அருகே, பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து மீது, அவரது வாகனம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
Next Story