வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனம் - தப்பி ஓடிய ஓட்டுனர் - பல்லடம் அருகே பரபரப்பு..
பல்லடம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன ஓட்டுனர் தப்பியோடியதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
பல்லடத்திலிருந்து திருப்பூருக்கு அதிவேகமாக சென்ற சரக்கு வாகனம், அருள்புரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய சந்தோஷ் குமார் என்பவரை தேடி வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story