கோயிலின் பிரம்மாண்ட பந்தல் சரிந்து விபத்து... பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்!

ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான பந்தல் சரிந்து விழுந்ததில், பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
x
கோயிலுக்கு முன்பாக போடப்பட்டிருந்த பிரமாண்டமான பந்தலுக்குள், அதிக உயரத்துடன் பாரம் ஏற்றி வந்த லாரி புகுந்ததில், பந்தல் சரிந்து விழுந்தது. இதன் விளைவாக 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சரிந்த பந்தல் மற்றும் கடைகளை அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்