முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் || #ThanthiTv

திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
x
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சட்டமன்ற பட்ஜெட் மீதான விவாதம்‌, விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களும், புதிய அறிவிப்புகளும் வெளியான நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் எழுப்பும் கேள்விகளை, துறை ரீதியான அமைச்சர்கள் எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே கூட்டத்தில், கட்சியில் தவறு செய்பவர்கள் தானாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்