#Breaking : "ஊராட்சி தலைவர் பதவி நீக்க உத்தரவு ரத்து"

மேலபட்டம்கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவி பதவியிலிருந்து நீக்கம் செய்ய ராஜபாளையம் வட்டாட்சியர் பிறப்பித்த அறிவிப்பினை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
x
மேலபட்டம்கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவி பதவியிலிருந்து நீக்கம் செய்ய ராஜபாளையம் வட்டாட்சியர் பிறப்பித்த அறிவிப்பினை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து மேலபட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவி லட்சுமிஅழகுபிரியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

அதில், "நான் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட மேலபட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவியாக உள்ளேன். நான் அதிமுக கட்சியை சேர்ந்தவர்.

தற்போது திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த நிலையில் என் மீது 4 விதமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த விளக்க நோட்டீஸ் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராஜபாளையம் வட்டாட்சியர் என்னை பஞ்சாயத்துத் தலைவி பதவியிலிருந்து நீக்கம் செய்வது குறித்து அறிவிப்பினை வெளியிட்டார்.

எனவே, மேலபட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவி பதவியில் இருந்த என்னை நீக்கம் செய்ய ராஜபாளையம் வட்டாட்சியர் வெளியிட்ட அறிவிப்பினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, மேலபட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவி பதவியிலிருந்து நீக்கம் செய்ய ராஜபாளையம் வட்டாட்சியர் பிறப்பித்த அறிவிப்பினை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்