"மின்னல் வேகத்தில் முதல்வர் செயல்படுகிறார்" - நடிகை ரோஜா

அனைத்து தரப்பு மக்களின தேவைகளை நிறைவேற்றுவதற்காக, முதல்வர் ஸ்டாலின் மின்னல் போல செயல்படுவதாக நடிகை ரோஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
x
அனைத்து தரப்பு மக்களின தேவைகளை நிறைவேற்றுவதற்காக, முதல்வர் ஸ்டாலின் மின்னல் போல செயல்படுவதாக நடிகை ரோஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். 

சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் எழும்பூர் திமுக இளைஞர் அணி சார்பில், புரசைவாக்கம் தானே தெருவில், முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, புகழ் அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, நகைச்சுவை நடிகர்கள் பாஸ்கர், மயில்சாமி, திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர்கே செல்வமணி, நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினருமான நடிகை ரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய நடிகை ரோஜா, அனைத்து தரப்பு மக்களின தேவைகளை நிறைவேற்றுவதற்காக, முதல்வர் ஸ்டாலின் மின்னல் போல் செயல்படுகிறார் என பெருமிதம் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்