இறகு பந்து விளையாடிய அமைச்சர் மெய்யநாதன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் மெய்யநாதன், தனது குடும்பத்தினருடன் வந்திருந்து தரிசனம் செய்தார்.
x
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் மெய்யநாதன், தனது குடும்பத்தினருடன் வந்திருந்து தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, திருச்செந்தூர் தொகுதியில் அமைய இருக்கும்  விளையாட்டு மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 209 தொகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை எனவும் முதற்கட்டமாக  3 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் உள்பட மைதானங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். 

திருச்செந்தூரில் விளையாட்டு உள் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்வதற்காக வந்திருந்த அமைச்சர் மெய்யநாதன், கோகுல் நகர் பகுதியில் அமைந்துள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் விளையாட்டு உள் அரங்கத்திற்கு சென்றார். அரங்கத்தை பார்வையிட்ட பின், அங்கு பயிற்சியில் இருந்த மாணவர்கள் மற்றும் சிறுவர்களுடன் இறகு பந்து போட்டியில் பங்கேற்று, 21 சுற்றுகளிலும் உற்சாகத்துடன் விளையாடினார். பின்னர் , அங்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் மற்றும்  விளையாட்டு வீரர்களிடம் கலந்துரையாடினார்.


Next Story

மேலும் செய்திகள்