விமான நிலையத்திற்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த டெல்லி தொழிலதிபர்

ராஜஸ்தான் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தொழிலதிபரிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
x
ராஜஸ்தான் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தொழிலதிபரிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரான சுனில் சொல்லாகி என்பவர் ராஜஸ்தான் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த போது அவரது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவரது உடைமைகளில் கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 2 குண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்த நிலையில் அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்