"நேர்மையாக பணியாற்றியதால் கொலை மிரட்டல்" - பெண் மருத்துவர் பரபரப்பு வீடியோ

"நேர்மையாக பணியாற்றியதால் கொலை மிரட்டல்" - பெண் மருத்துவர் பரபரப்பு வீடியோ
x
நேர்மையாக பணியாற்றும் தனக்கு உயரதிகாரிகள் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி கன்னியாகுமரி பெண் மருத்துவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் பெமிலா, முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு, பணியில் இருந்த போது அங்கு நடக்கும் முறைகேடுகளை தட்டி கேட்டதால் உயரதிகாரிகளால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பல போராட்டங்களுக்கு இடையே மீண்டும் அங்கேயே வேலையில் சேர்ந்தார். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாகக் கூறி அவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், உயரதிகாரிகளின் அநீதிக்குத் துணை போகாத தன்னைப் பெண் மருத்துவர் என்றும் பாராமல், பணி இடத்திற்கு செல்ல விடாமலும், தனது 2 குழந்தகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தும் அச்சுறுத்துவதாகத் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், தனது உயரதிகாரி மருத்துவர் மதுசூதனன் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி உண்மைகளைக் கண்டறிய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்