15 லட்சம் வருகை... “ரூ.15 கோடி விற்பனை“... இறுதி நாளில் சென்னை புத்தக கண்காட்சி

15 லட்சம் வருகை... “ரூ.15 கோடி விற்பனை“... இறுதி நாளில் சென்னை புத்தக கண்காட்சி
x
சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுவதால், ஏராளமான வாசகர்கள் வருகை தந்துள்ளனர்... வாசகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 45வது புத்தக கண்காட்சி கடந்த 16ம் தேதி தொடங்கியது. ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 12 கோடி ரூபாய்க்கு அதிகமாக புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாகவும், 8 லட்சம் மாணவர்கள் உட்பட 15 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. புதினம், அரசியல், வரலாறு, ஆன்மிகம் உள்ளிட்டவை பெரும்பாலான வாசகர்களின் தேர்வாக இருந்துள்ளது. கல்கி, சாண்டில்யன், வைரமுத்து, ஜெயகாந்தன், ஜெயமோகன், கி.ரா, தொ.பரமசிவன், மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட படைப்பாளிகளின் புத்தகங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வைரவன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்