#Breaking || தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூரில் கனமழைக்கு வாய்ப்பு
x
நேற்று காலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம்  நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுவிழந்து  இன்று காலை  மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக  தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும்  வலுவிழக்க கூடும்.    இதன் காரணமாக,

06.03.2022: கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர்,  பெரம்பலூர்,  புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்   இடிமின்னலுடன்  கூடிய  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  

07.03.2022: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

08.02.2022: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


Next Story

மேலும் செய்திகள்