காதலனை கரம்பிடிக்க தாலி கட்டும் நேரத்தில் மயங்கிய மணப்பெண்
காதலனை கரம்பிடிக்க வேண்டி, தாலி கட்டும் முன் மணப்பெண் மயங்கி விழுந்து தப்பிய சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோட்டில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று திருமணம் விழா நிகழ்வு களைகட்டியது. அம்பத்தூரை சேர்ந்த மணமகனுக்கும், கூடுவாஞ்சேரி பெண்ணுக்கும் பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் திருமண ஏற்பாடு நடந்தது. தாலி கட்ட சிறிது நேரத்துக்கு முன் மணப் பெண் மயங்கி விழுந்தார். அவரை மீட்ட உறவினர்கள், மருத்துவமனையில் சேர்த்தபோது, மணப் பெண் நலமாக உள்ளார் என்பதும், பிரச்சினை ஏதும் இல்லை என்பதும் தெரியவந்தது. பின்னர், காதலித்த நபரை திருமணம் செய்வதற்காக, இதுபோன்று செய்ததாகவும் மணப் பெண் கூறினார். இதனால், மணமகன் வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் பெரும் தகராறு ஏற்பட்டது. 7 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து விட்டதாக மணமகன் வீட்டார் வேதனை தெரிவித்தனர். பின்னர், காவல் நிலையம் மூலம், அவரவர் சீர் பொருட்களை வாங்கிக்கொண்டு கலைந்து சென்றனர்.
Next Story