அமைச்சர்கள் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு | Chennai | Madurai

மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானம் ஒன்று, சில நிமிடங்களிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது
x
மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானம் ஒன்று, சில நிமிடங்களிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. 162 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை செல்ல இருந்தது. ஓடுபாதையில் இருந்து பறக்க தொடங்கிய விமானம், சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த விமானத்தில் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் பெரியகருப்பன் உள்ளிட்டோரும் பயணிக்க இருந்தனர். இதனால், அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்