5 வருட காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு... விபரீத முடிவெடுத்த காதல் ஜோடி

மதுரை சோழவந்தான் அருகே காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த லோகபிரபுவும், துவரிமான் பகுதியை சேர்ந்த துர்கா தேவி என்பவரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரது காதல் விவகாரமும் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் லோக பிரபு வீட்டில் உள்ள அவரது அறையிலிருந்து நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டார் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, லோகபிரபுவும், துர்கா தேவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது சடலத்தையும் மீட்டு, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்