மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு - தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கடந்த 2007-ல் உருவாக்கப்பட்டது
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு - தமிழக அரசு உத்தரவு
x
முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தை மறுசீரமைப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான திட்டங்களை அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கடந்த 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தை சீரமைப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் படி, அந்த வாரியத்தின் தலைவராக முதலமைச்சரும்,  துணைத்தலைவராக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல், நிதித்துறை முதன்மைச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் ஆகியோர் இந்த வாரியத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளையும், உறுப்பினர்களாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்