3ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

திருவள்ளூரில், 3ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியரை கிராம மக்கள் அடித்து, உதைத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
திருவள்ளூர் மாவட்டம், வெளியகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொதட்டூர் பேட்டையை சேர்ந்த ஜெயகோபி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அதே பள்ளியில் படிக்கும் 3 ஆம் வகுப்பு மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை அடித்து உதைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இதே பகுதியில் ஒரு ஆசிரியர் பணி மாறுதல் பெற்று சென்ற போது மாணவ, மாணவிகள் கதறி அழுது பாசப்போராட்டம் நடத்திய நிகழ்வு நாடு முழுவதும் பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்