சென்னையில் காவலர்களுக்கு நடந்த நீச்சல் போட்டி | Chennai | Police

சென்னையில் காவலர்களுக்கான இரண்டு நாள் நீச்சல் போட்டியினை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
x
சென்னையில் காவலர்களுக்கான இரண்டு நாள் நீச்சல் போட்டியினை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். 61வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியானது, வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் பயிற்சி கூடத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆண்கள், பெண்களுக்கு இடையே நடைபெறும் இந்த நீச்சல் போட்டியை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கியும் பாராட்டினார்.அதனை தொடர்ந்து, பேசிய ஆணையர் சங்கர் ஜிவால் போட்டியில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல என்றும், பங்கேற்பது அவசியம் எனவும் அறிவுரை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்