சசிகலாவை சந்தித்த அதிமுக நிர்வாகிகள் நீக்கம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திடீர் ஆலோசனை

சசிகலாவை சந்தித்த அதிமுக நிர்வாகிகள் நீக்கம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திடீர் ஆலோசனை
x
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பனும் சந்தித்துப் பேசி உள்ளனர். சசிகலாவை சந்தித்த ஓ.ராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பனும் திடீர் சந்திப்பில் ஈடுபட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Next Story

மேலும் செய்திகள்