வி.சி.க.வுக்கு எதிராக திமுக போட்டி வேட்பாளர்கள்; திமுக எம்.எல்.ஏ. கார் முற்றுகை - போலீசார் தடியடி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு எதிராக, திமுக போட்டி வேட்பாளர்கள் நின்று வெற்றி பெற்றதைக் கண்டித்து, விரக்தியில் திமுக எம்எல்ஏ கார் முற்றுகையிடப்பட்டது.
x

திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, நெல்லிக்குப்பம்  நகராட்சித் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால் தேர்தலில், அக்கட்சிக்கு எதிராக திமுக போட்டி வேட்பாளர் நின்று வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலிலும், திமுக போட்டி வேட்பாளரே வெற்றி பெற்றார். இதனையடுத்து அங்கு வந்த நெய்வேலி திமுக சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் காரை, விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகையிட்டனர். அப்போது, அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்