ஹெராயின் எனக் கூறி யூரியாவை விற்க முயற்சி - 4 பேர் கைது

சென்னை அடுத்த மாதவரத்தில் ஹெராயின் எனக்கூறி விவசாயத்திற்கு பயன்படுத்தும் யூரியாவை விற்க முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
x
சென்னை அடுத்த மாதவரத்தில் ஹெராயின் எனக்கூறி விவசாயத்திற்கு பயன்படுத்தும் யூரியாவை விற்க முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

மாதவரம் பகுதியில் போதைப் பொருள் கைமாறுவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், கடந்த 28ஆம் தேதி தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமீம் அன்சாரி, முத்துராஜா, அருண்குமார் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும், இந்த கும்பல் கடந்த இரண்டு வருடங்களாக ஒரிஜினல் ஹெராயினை கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், நூதன முறையில் பலரை நம்ப வைத்து மோசடி செய்ய முயன்ற நான்கு பேர் மீதும், மோசடி உட்பட 4 பிரிவுகளின் கீழ் பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்