“உக்ரைனில் சிக்கிய மகனை மீட்க வேண்டும்“ - மனு அளித்த தாய் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

“உக்ரைனில் சிக்கிய மகனை மீட்க வேண்டும்“ - மனு அளித்த தாய் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
உக்ரைனில் சிக்கியுள்ள மகனை மீட்கக்கோரி, கர்நாடக மாநிலம் ஹசன் ஆட்சியரகம் வந்த பெண் ஒருவர், மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ககன் கவுடா என்ற மாணவர், உக்ரைனில் மருத்துவம் பயின்று வருகிறார். அவர் தங்கியிருக்கும் கார்கிங் நகரில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், வெளியேற முடியாமல் தவித்து வருவதாக பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில், தனது மகனை மீட்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண், வெளியே வந்தபோது திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்