திருப்பதி சென்றவர் வீட்டில் திருடர்கள் கைவரிசை - 40 சவரன் நகை கொள்ளை

திருப்பதி சென்றவர் வீட்டில் திருடர்கள் கைவரிசை - 40 சவரன் நகை கொள்ளை
x
திருப்பதி சென்றவர் வீட்டில் திருடர்கள் கைவரிசை - 40 சவரன் நகை கொள்ளை திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன், தனது குடும்பத்தாருடன் நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, 40 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், 40ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்கோட்டை போலீசார் தடயங்களை சேகரித்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்