"தமிழகத்தில் காங்கிரசுக்கு மிக பெரிய பொறுப்பு உள்ளது" - ராகுல் காந்தி | Rahul Gandhi

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை கட்டமைக்க வேண்டுமென்றால் தமிழகத்தில் கட்சியை வலுவாக உருவாக்க வேண்டும் என, ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்
x
சென்னை சத்தியமூர்த்தி பவனில் , உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு மிக முக்கியமான மாநிலம் என்று குறிப்பிட்டார்.
 காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும், கொள்கை மாறாமல், சமரசத்துக்கு இடமளிக்காமல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வலிமையாக ஆக்க வேண்டும் என்றால் முதலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்றார். திமுக உடன் இணைந்து தமிழகத்தில் மிக பெரிய சக்தியாக உள்ளதாக குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்