சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி - கடந்து வந்த பாதை

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்து வந்த பாதை குறித்து இப்போது பார்ப்போம்.
x
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள  முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்து வந்த பாதை குறித்து இப்போது பார்ப்போம்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி,1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் ராஜஸ்தானில்  பிறந்தவர்.
ராஜஸ்தான் அரசு  வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தி துறையின் வழக்கறிஞராகவும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.

2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற இவர்,  2019ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.  

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக அவர் பதவி வகித்து வந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, முனீஷ்வர்நாத் பண்டாரி பதவி வகித்த போது, நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, 

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதை ரத்து செய்தது போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், 
தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது, 

விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டது போன்ற நடவடிக்கைளையும் முனீஷ்வர் நாத் பண்டாரி மேற்கொண்டுள்ளா்.

Next Story

மேலும் செய்திகள்