"இந்தியாவை சமூக நீதி நாடாக மாற்றுவதுதான் இலக்கு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதி கூட்டமைப்பில் இணைய பல கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து தொடர்ந்து கடிதங்கள் வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
x
சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா முழுவதும் சமூகநீதியை மலரவைக்கும் முயற்சியில் தான் செயல்பட்டு வருவதாகவும், சமூக நீதி கூட்டமைப்பில் இணைய பல கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து தொடர்ந்து கடிதங்கள் வந்து கொண்டிருப்பதகாவும் தெரிவித்து உள்ளார். இந்திய கூட்டாட்சிக்கு தற்போது ஆபத்து வந்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர் அனைத்து மாநில மக்களுக்குமான உரிமையும், சலுகைகளும் தரப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், ஒன்றிய பாஜக அரசு திணித்த நீட் தேர்வானது ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைத்து தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைக் குலைக்கப் பார்க்கிறது என்றும் சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வானது நாம் போராடிப் பெற்ற கல்வி உரிமைக்கு ஆபத்தாக வருகிறது என்பதால் அதனை எதிர்க்கிறோம் என்றும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்