"போட்டி வேட்பாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர்" - அமைச்சர் தா.மோ. அன்பரசன் எச்சரிக்கை

கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் திமுக போட்டி வேட்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என, அமைச்சர் தா.மோ. அன்பரசன் எச்சரித்தார்.
x
கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் திமுக போட்டி வேட்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என, அமைச்சர் தா.மோ. அன்பரசன் எச்சரித்தார். சென்னை தாம்பரத்தில், திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், திமுகவில் உள்ள போலி பேர் வழிகள் களை எடுக்கப்படுவர் என்றார். கட்சி யாருக்காவும் வளைந்து கொடுக்காது எனவும், கட்சி தலைமை அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், போட்டி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என, எச்சரித்தார். 


Next Story

மேலும் செய்திகள்