"இனி நீர் நிலைகள், நீர் வழிப்பாதையை பத்திரபதிவு செய்ய தடை" தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் நீர்நிலைகள் ,நீர்வழி பாதைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர்நிலைகள் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆவணப்பதிவு செய்ய தடை தடை விதிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் நீர்நிலைகள் ,நீர்வழி பாதைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர்நிலைகள் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆவணப்பதிவு செய்ய தடை தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் பத்திரப்பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன்படி நீர்நிலை, நீர்வழிப்பாதையை பத்திரப்பதிவு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக நிலம் வாங்குவோர் மற்றும் விற்போரிடம் உறுதிமொழி வாங்க வேண்டும் எனவும் பதிவுத் துறை தலைவர் சிவனருள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story