"பாஜக அரசிற்கு தமிழகத்தின் மேல் அக்கறை இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம் எனவும் அதனை நிச்சயமாகச் செயல்படுத்திக் காட்டுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம் எனவும் அதனை நிச்சயமாகச் செயல்படுத்திக் காட்டுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி மூலம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர், தமிழ்நாட்டு மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளைச் செய்வதற்காக ஆறாயிரத்து 500 கோடி ரூபாய் நிதி உதவி  மத்திய அரசிடம் கோரப்பட்டதாக தெரிவித்தார். 3 மாதங்கள் ஆகியும் இன்னும் நிதி வரவில்லையென்று குறிப்பிட்டார். இதுதான் மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது காட்டும் அக்கறை என தெரிவித்தார். இதன் காரணமாகவே பாஜகாவிற்கு மக்கள் வாக்களிப்பது இல்லையெனவும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர்  கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையெனவும்  குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்