அடேங்கப்பா 5 வயதில் இப்படி ஒரு சாதனையா...!
சென்னையில் 8 நிமிடத்தில் 50க்கும் மேற்பட்ட கோள்களின் பெயர்களை சொல்லி 5 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் 8 நிமிடத்தில் 50க்கும் மேற்பட்ட கோள்களின் பெயர்களை சொல்லி 5 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த அஜய் ஜோசப் மற்றும் அபிநயா ஆகியோரின் 5 வயதான மகன் ரெனால்ட் அந்தோணி. இவர் 50 க்கும் மேற்பட்ட கோள்களின் பெயர்கள் மற்றும் அதை பற்றி விவரங்களை விளக்கி பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்த முயற்சியை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் சாதனையாக அறிவித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
Next Story