கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்ட காவடி ஊர்வலம்

கன்னியாகுமரி மாவட்டம் இராமவர்மன் புதுத்தெரு முத்தாரம்மன் கோயிலில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம் புறப்பட்டுள்ளது.
x
கன்னியாகுமரி மாவட்டம் இராமவர்மன் புதுத்தெரு முத்தாரம்மன் கோயிலில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம் புறப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் மாசி திருவிழா நாளில், குமரியில் உள்ள  பல்வேறு கோயில்களில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி பலவிதமான காவடிகளை ஏந்தி ஊர்வலமாக  திருச்செந்தூருக்கு செல்வது வழக்கம். அதன்படி,  நித்திரவிளை அருகே உள்ள இராம வர்மன் புதுத்தெரு முத்தாரம்மன் கோயிலில் இருந்து பறக்கும் காவடி ஊர்வலம் மேளதாளத்துடன் திருச்செந்தூருக்கு புறப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்