"சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்?" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைத்த 8 மாதங்களில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி மூலம் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என பட்டியலிட முடியுமா? என கேள்வி எழுப்பினார். திமுக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றியதாக எடப்பாடி பழனிசாமி கூறுவதாக தெரிவித்த முதல்வர், சொன்னதை மட்டும் இல்லாமல் சொல்லாத பல திட்டங்களையும் திமுக நிறைவேற்றியுள்ளதாக கூறினார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுத்ததால் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாகவும் முதல்வர் குற்றம்சாட்டினார். எனவே தி.மு.க ஆட்சி மீது குறை சொல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த தகுதியும் இல்லையென்றும் முதல்வர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்