"கூட்டத்துக்கு அதிமுக வராதது, ஆளுநரை திருப்திப்படுத்தும் செயல்" - மா.சுப்பிரமணியன்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது, ஆளுநரை திருப்திப்படுத்த எடுத்த முடிவு என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடினார்.
x
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது, ஆளுநரை திருப்திப்படுத்த எடுத்த முடிவு என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடினார். சென்னை மேற்கு மாம்பலத்தில் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்த அவர், வேட்பாளர் மகேஷ்குமார், சிறந்த மக்கள் சேவையாளர் என அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நீதி கூட்டமைப்புக்கு, தான் தலைவர் என முதல்வர் எங்கேயும் சொல்லவில்லை என்றார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் நோக்கம் என்ற மா.சுப்பிரமணியன், முன்பு இருந்த எந்தக் கட்சியின் ஆளுநரும், குடியரசு தலைவருக்கு தீர்மானங்களை அனுப்பியதாகவும், தற்போது இருப்பவர் அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்