பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி - அமைச்சரின் மனைவி, மகன் போட்டி
செஞ்சியின் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மனைவி மற்றும் மகன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
செஞ்சியின் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மனைவி மற்றும் மகன் வேட்புமனு தாக்கல் செய்தனர். செஞ்சியில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் 18வது வார்டில் விறுவிறுப்பாக மனுதாக்கல் நடைபெற்றது. இதில் 16வது வார்டில் போட்டியிடும் அண்ணாதுறை தெருக்கூத்து கலைஞர்களுடன் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார். இதேபோன்று பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு சிறுபான்மையினர் நலந்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மனைவி சைதானிபீயும், 6வது வார்டில் அவரது மகன் மொக்தியார் மஸ்தானும் மனு தாக்கல் செய்தனர்.
Next Story