புதிய ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.1000..!! - கொந்தளிக்கும் அரசியல் பிரமுகர்கள்

தமிழகத்திற்கான 9 புதிய ரயில்வே வழித்தடத் திட்டங்களுக்கு மத்திய அரசு வெறும் ஆயிரம் ரூபாய் நிதி மட்டுமே நிதி ஒதுக்கி இருப்பதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
x
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து, ரயில்வே திட்ட புத்தகம் நேற்று மாலை வெளியிடப்பட்டது. 

இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புத்தூர், ஈரோடு- பழனி, சென்னை -கடலூர், மதுரை - தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை- ஆவடி; மொரப்பூர்- தர்மபுரி ஆகிய எட்டு புதிய வழித்தட திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், காட்பாடி - விழுப்புரம் இரட்டை ரயில்பாதை திட்டத்திற்கும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சு.வெங்கடேசன், தொடர்ந்து மூன்றாவது பட்ஜெட்டாக, மிகக் குறைந்த தொகையை தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார். 

இதேபோல், தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்ட பணிகளுக்கு 0.7 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியது அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்