அடகுக் கடைக்காரர் நகை பையை அபேஸ் செய்த கொள்ளையர்கள்- போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரிலேயே துணிகரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் காவல் நிலையம் அருகே, ஒரு கிலோ வெள்ளி, 113 கிராம் தங்கம் இருந்த பையை இருவர் வழிப்பறி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
வேப்பனபள்ளி காவல் நிலையம் எதிரே நகைக் அடகுக் கடை நடத்தும் மோகன்லால், எட்டரை மணிக்கு கடையை மூடியுள்ளார். அதைத் தொடர்ந்து கடையில் இருந்த, தங்கம், வெள்ளி நகைகளை பையில் எடுத்து பைக்கில் வைத்துள்ளார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அடகுகடைக்காரரின் நகைப் பையை திருடிச் சென்றனர். அவர்களை நகை அடகுக் கடை உரிமையாளர் மோகன்லால், பின்தொடர்ந்த நிலையில், ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்