கோதாவரி - காவிரி இணைப்பு.. சாத்தியமா? இல்லையா? - வல்லுநர்கள் சொல்வது என்ன?

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதில் உள்ள சாதக பாதகங்களை அலசும் ஒரு தொகுப்பை காணலாம்
x
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதில் உள்ள சாதக பாதகங்களை அலசும் ஒரு தொகுப்பை காணலாம்...

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் 247 டிஎம்சி நீரை திருப்பி தெலுங்கானாவிற்கு 83 டி.எம்.சியும், ஆந்திராவிற்கு 81 டி.எம்.சியும், தமிழ்நாட்டிற்கு 83 டி.எம்.சியும் வழங்க தேசிய நதிநீர் திட்ட வளர்ச்சி அமைப்பு திட்டமிட்டுள்ளது. 

இந்த திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருப்பதை தமிழக அரசு வரவேற்றுள்ளது. இந்த திட்டம் சாத்தியப்படுமா என்ற கேள்வி எழும் நிலையில் சாத்தியம் என்கிறார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ்...

ஆனால் மறுபுறம் 10 ஆண்டுகள் ஆனாலும் இந்த திட்டத்தை முடிக்க முடியாது என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத் தலைவர் வீரப்பன்..தெலுங்கானாவும், ஆந்திராவும் ஏற்கனவே 230-க்கும் அதிகமான டி.எம்.சி. நீரை திருப்பிவிட்ட நிலையில், கோதாவரியில் சொல்லப்படும் உபரி நீர் இருக்கிறதா என கேள்வி எழுப்பும் வீரப்பன், தமிழக அரசு, தமிழக நீர் சேமிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்