"திருநங்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்" - அதிமுக வேட்பாளர் திருநங்கை ஜெயதேவி
அதிமுக அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பேன் என சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள திருநங்கை ஜெயதேவி தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பேன் என சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள திருநங்கை ஜெயதேவி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பாக 112 வது வார்டில் திருநங்கை ஜெயதேவி போட்டியிடுகிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் தனக்கு பெயர் சூட்டியதாக கூறினார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து மக்களுக்கு பணியாற்றிவருவதாக கூறினார். தேர்தலில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு திருநங்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என தெரிவித்தார்.
Next Story