தமிழகத்தில் மேலும் 14,013 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 14 ஆயிரத்து 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 75 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 24 ஆயிரத்து 576 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்து கோவையில் ஆயிரத்து 696 பேருக்கும், செங்கல்பட்டில் ஆயிரத்து 198 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்து 159 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஈரோட்டில் 813 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story