கர்ப்பிணி பெண்களை காக்கும் தடுப்பூசி
கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, கொரோனாவுக்கு கர்ப்பிணி பெண்களின் உயிரிழப்பு குறைந்துள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, கொரோனாவுக்கு கர்ப்பிணி பெண்களின் உயிரிழப்பு குறைந்துள்ளது.தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை 179 ஆக பதிவாகியுள்ளது.அதிகபட்சமாக கடந்த 2021ம் ஆண்டு, மே மாதம் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, 111 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.தொடர்ந்து கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான கொரனோ தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டது.அதன் பிறகு படிப்படியாக குறைந்த கர்ப்பிணி பெண்களின் உயிரிழப்பு, டிசம்பர் மாதத்தில் பூஜ்ஜிய நிலையை அடைந்தது.தற்போது தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 33 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கும் மற்றும் 5 லட்சத்து 2 ஆயிரம் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Next Story