சிறையில் உள்ளவர்களுக்கு அதிமுகவில் சீட் - கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பு

ஈரோடு மாநகராட்சியில், சிறையில் உள்ளவர்களுக்கு அதிமுகவில் சீட் வழங்கப்பட்டதால் அக்கட்சியினர் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
x
ஈரோடு மாநகராட்சியில், சிறையில் உள்ளவர்களுக்கு அதிமுகவில் சீட் வழங்கப்பட்டதால் அக்கட்சியினர் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட, இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கு சீட் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், அதிமுகவினர் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கட்சிக்காக உழைக்கும் பலருக்கும் சீட்டு வழங்காமல் மோசடி வழக்கில் சிறையில் உள்ள வைரவேல், முருகுசேகர், காஞ்சனா ஆகியோருக்கு சீட் வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்