நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - எத்தனை இடங்களில் தமிழக காங். போட்டி?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டி மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து இன்றுக்குள் முடிவு செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டி மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து இன்றுக்குள் முடிவு செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதனிடையே, சென்னையில் காங்கிரஸ் தரப்பில் 20 அல்லது 21 வார்டு வரை எதிர்பார்ப்பதாகவும், ஆனால் திமுக  14 முதல் 17 வார்டு தர முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் சென்னிதலாவுடன் ஆலோசனை நடத்திய பின், திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்