அடடா.. என்ன அழகு..!! பாம்பன் பாலத்தை கப்பல்கள் கடக்கும் கண்கொள்ளாக் காட்சி

பாம்பனை அடுத்தடுத்து கடந்த 3 கப்பல்கள் கப்பல்கள் கடப்பதை ஆர்வமுடன் கண்டுகளித்த மக்கள்
x
ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப் பாலம் வழியாக எல்லை பாதுகாப்பு ரோந்து கப்பல்கள் அடுத்தடுத்து கடந்து சென்றன.  கடந்த ஐந்து நாட்களுக்கு  முன் எல்லை பாதுகாப்புபடைக்கு சொந்தமான மூன்று ரோந்து கப்பல்கள்  கொச்சினில் இருந்து  மேற்குவங்கம்  செல்ல பாம்பன் தெற்கு மீன் பிடி துறைமுகத்திற்கு வந்தன. கடல் சீற்றம் காரணமாக பாம்பன் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இன்று காலை கடல் சீதோஷ்ண நிலை சீராக இருந்ததால் அந்த கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன. இந்த காட்சியை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்