60 அடி ஆழத்துக்கு அரிப்பு ஏற்பட்ட நெய்யாற்றின் கழுகுப் பார்வை காட்சி

குமரி மாவட்டம் வள்ளியூர் அருகே சேதமான நெய்யாற்றின் இடது கரையை சீரமைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
x
கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சியில் நெய்யார் இடதுகரை செல்கிறது. மரியகிரியில் இருந்து தெற்றிக்கோடு செல்லும் சாலையாக உள்ள அந்தக் கரை, கடந்த நவம்பர் மாதம் கனமழையில் அரிப்பு ஏற்பட்டு சேதமானது. சுமார் 60 அடி ஆழத்துக்கு அரிப்பு ஏற்பட்ட நிலையில், கரைச் சாலையை பயன்படுத்தும் மக்கள் தற்போது சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். சாலையில் செல்லக் கூடாது என போலீசார் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். 3 மாதத்துக்கு மேலாகியும் சாலையை சீரமைக்காமல் உள்ளதால், 
களியக்காவிளை, படந்தாலுமூடு பகுதிகளுக்கு, பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதியினர், பொதுப் பணித் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். பள்ளம் ஏற்பட்டுள்ளதை, பறவை பார்வையாக எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்