"கொரோனா பரவல் - அஜாக்கிரதையாக இருக்க கூடாது"

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
x
தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை தேனாம்பேட்டையில்  உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில்   தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 
கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் விஷயத்தில் 
பொது மக்கள் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்று கூறினார். கொரோனாவை  ஒழிக்க பொது
மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் 
கேட்டு கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்