நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை - விரைவில் வேட்பாளர்கள் பட்டியல்?
சென்னை அடுத்த பனையூரில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை அடுத்த பனையூரில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கத்தில் மாவட்ட தலைவர்கள், தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வேட்பாளர் குறித்த பட்டியலை மாவட்ட தலைவர்கள், அகில இந்திய விஜய் மக்கள் இயக்க தலைமைக்கு அனுப்புவார்கள் என்றும், அதன்பின்முடிவு செய்யப்படுமென்றும் குறிப்பிட்டார்.
Next Story